பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இ. புலவர் கா. கோவிந்தன்

நீர் அற்ற புலமேபோல் புல்லென்றாள், வைகறை கார்பெற்ற புலமேபோல் கவின்பெறும்; அக்கவின் தீராமல் காப்பதோர் திறன் உண்டேல் உரைத்தைக்காண்: இருளிடை என்றாய் நீ, இரவு அஞ்சாய் வந்தக்கால், பொருள் இல்லான் இளமைபோல் புல்லென்றாள், வைகறை

15

அருள் வல்லான் ஆக்கம்போல் அணிபெறும் அவ்வணி, தெருளாமல் காப்பதோர் திறன்உண்டேல் உரைத்தைக்

- காண்; மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால், அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை திறன் சேர்ந்தான்் ஆக்கம்போல் திருத்தகுய் அத்திருப் 20 புறங்கூற்றுத் தீர்ப்பதோர் பொருள் உண்டேல் உரைத்தைக்

காண்:

என ஆங்கு, நின் உறுவிழுமம் கூறக்கேட்டு வருமே தோழி! நன்மலை நாடன், வேங்கை விரிவிடம் நோக்கி, 25 வீங்குஇறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே.”

இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனைக் கண்டு. தோழி, தலைவியின் துயர்நிலை கூறி வரைவு கடாவ, அவன் வரைய இசைந்ததைத் தலைவிக்குக் கூறியது என்ற துறையமைய வந்துளது இச்செய்யுள்.

உள்ளுறை மலர்ந்து மணம் நாறும் வேங்கையைக் கொடிய புலியெனக் கொண்டது, இல்லறப் பயனோடு கூடிய பேரின்பம் தர வழி செய்யும் வரைவுகடாய