பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 29

கூற்றைக் களவின்கண் பெறும் இன்பத்தை இழக்கச் செய்தல் கருதிக் கொடிதெனக் கருதுதலாம். யானை, தலைவனாம். அது வேங்கையை அழிக்க எண்ணுதல், தோழியின் வரைவுகடாய கூற்றை மறுக்கத் துணிதலாம். கோட்டினைப் பிடுங்கமாட்டாது கூவி அழுதல், அவள் கூற்றைக் கொடுமை உடையதாகக் கருதியதை மாற்றிக் கொள்ள மாட்டாமல், தலைவன் வருந்திக் கூறலாம்.

1. வாங்கிய வளைத்த, 4. தொடி, வீரவளை, 5. உழத்தல்: வருந்துதல்; 6. உறுபுலி, ஊக்கம் மிக்க புலி, 8. நீடு இரு விடரகம்: நீண்ட பெரிய மலையின் பிளவுகள்; சிலம்ப எதிரொலிக்க, 9. புய்க் கல்லாது பிடுங்கமாட்டாமல்; 10. புலம்: விளைநிலம்; புல்லென்றாள்: அழகு இழந்தவள்; 12. உரைத்தைக்காண் கூறு 17. தெருளாமல்; உணராமல்; (அவ்வழகு தலைவன் வருகையால் வந்தது என உணரா வண்ணம்;) 18. மறம் திருந்தார்: கொலைத் தொழிலைக் குறைவறப் பெற்ற கானவர்; 21. புறங்கூற்று. அயலார் கூறும் அலர்; 26. வீங்கு இறைபணைத் தோள்; பெருத்த முன் கையினை உடைய பெரிய தோள்.