பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

வெற்பனும் வந்தனன்

மலை நாட்டுச் சிற்றுார் ஒன்றில், உயர்ந்த குடியில் பிறந்த ஒரு பெண், மலைச் சாரலின்கண் உள்ள தங்கள் தினைப் புனத்தைக் காத்து வந்தாள். ஒரு நாள், தங்கள் புனத்தை அடுத்து ஒடும் காட்டாற்றில் புது வெள்ளம் வருவது அறிந்து, அதில் ஆடிமகிழத் தன் தோழியரோடும் ஆண்டுச் சென்றாள். சென்று புனலில் பாய்ந்து ஆடிக் கொண்டிருக்குங்கால், அவள் கால்கள் தளர்ந்து போயின. அவள் நடுங்கி விட்டாள். தாமரை மலர் போல் ஒளி வீசும் அவள் கண்கள் சோர்ந்து விட்டன. ஆற்று வெள்ளம் அவளைத் தன்னோடே அடித்துக் கொண்டு சென்றது. அப்போது, அவ்வழி வந்த ஒர் இளைஞன், அதைக் கண்டு, ஆற்று நீரில் திடுமெனக் குதித்துத் தன் மார்பில் அணிந்துள்ள புன்னை மலர் மாலை அலையுமாறு நீந்திச் சென்று, அவளைப் பற்றித் தன் மார்பு அவள் மார்போடு பொருந்துமாறு அணைத்துக் கொண்டே வந்து, கரை சேர்த்துக் காப்பாற்றினான்.