பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ஒ 31

இவ்வாறு ஒரு சூழ்நிலை வாய்க்கும் என்பதை அப் பெண்ணோ அல்லது அவனோ எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவ்வாறு ஒரு நிலை வாய்த்து விட்டது. எதிர்பாராது நிகழ்ந்ததேயாயினும், அது அவ்விருவர் உள்ளத்தும் காதல் விதையைத் தூவி விட்டது. அன்று முதல், அவன், தினைப் புனத்திற்கு வந்து, அப்பெண் ணோடு சிறிது நேரம் அளவளாவி மகிழ்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டு விட்டான். அவர்கள் காதல் வளர்ந்தது. ஆயின் ஆற்று நிகழ்ச்சியையோ, அவர்கள் காதல் ஒழுக்கத்தினையோ, அப் பெண்ணின் பெற்றோர் அறியார்.

சில நாட்களில், பெண்ணைப் பெற்றோர், அவளைத் தம் வீட்டிற்குக் கொண்டு சென்று விட்டனர். அதனால், அவளைக் காண்பதும் அவனுக்கு அரிதாகி விட்டது ஆகவே, அவன் அவளை மணஞ்செய்து கொள்ள உறுதி பூண்டான். அவ்வாறே, அவன் பெற்றோர் அப் பெண் னின் பெற்றோரின்பால் மணம் பேச வந்தனர். ஆனால் அவள் பெற்றோர் யாது காரணத்தாலோ. அம்மணத்திற்கு இசைய மறுத்து விட்டனர். -

அதை அறிந்தாள் அப் பெண்ணின் தோழி. பெற்றோர் செயலால் பெரும்பழி நேரும் என உணர்வாள் அவள். அப் பெண் மணந்து கொள்வதாயின், அவ்விளை ஞனையே மணந்து கொள்ளுதல் வேண்டும். அவன் அவளை ஆற்று நீரிலிருந்து காப்பாற்றிய அன்றே, அவனை அவள் கணவனாகக் கொண்டு விட்டாள். ஆகவே, அவளை அவனுக்கே மணம் செய்து தரல் வேண்டும். அதற்கு மாறாக, அவனுக்கு மணம் செய்து தர