பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புலவர் கா. கோவிந்தன்

மறுப்பரேல், அவள் உயிர் வாழாள். அதனால், அவள் பெற்றோர் பெருங் கேடுறுவர். மேலும், தம் மகள் உயிரைக் காத்து, அவன் செய்த நன்றியை மறந்த பாவிகளுமாவர் என அஞ்சினாள். ஆனால், அவளும், அவனும் கொண்ட காதலை அவள் பெற்றோர் அறியார். அதனாலேயே, அவர்கள் மறுத்தனர். ஆகவே, அவர்கள் மீதும்பழியில்லை, என இவ்வாறும் எண்ணிற்று அவள் உள்ளம். ஆகவே, அதை அவர்களுக்கு உணர்த்த உறுதி கொண்டாள். உடனே, அப் பெண்ணை வளர்த்தவளும், அப் பெண்ணைப் பெற்ற தாயின் உயிர்த் தோழியுமாய தன் தாயிடம் சென்றாள்.

"அம்மா! நம் மலைநாடு, இப்போது வற்றாத வளம் பல பெற்று விளங்குகிறது. ஆனால், இனி அவ்வளம் அற்றுவிடும். வள்ளிக் கொடி கிழங்கு விடாது. மலைகளில் உள்ள தேன் கூடுகளில் தேன் சேராது. கொல்லையில் நாம் விதைத்த தினை நன்கு கதிர் வாங்காது. காரணம், நம்மலை நாட்டு மக்கள் அறம் பிறழ்ந்து விட்டனர். பழிதரு செயல் புரியத் தொடங்கி விட்டனர். நிலவளம் அற்றுப் போய்விடின், அது பற்றிக் கவலை இல்லை. வேட்டை யாடிப் பிழைத்து விடுவோம்! என்று அவர்கள் கூறலாம். ஆனால் அதுவும் இயலாது. மலை நாட்டு மகளிர், தம் கணவரையே கடவுளாகக் கொண்டு வணங்கி வழிபடும் கற்பு நெறியில் பிறழாது நிற்பதனாலேயே, அவர் கணவன்மாராய கானவர்களும் வேட்டையில் வல்லரா யுள்ளனர். அவர்கள் எய்யும் அம்பும், குறி தவறாது சென்று, உயிர்களைக் கொல்கிறது. இனி அது இயலாது. காரணம் மலை நாட்டு மகளிரின் கற்பு நெறிக்குக் கேடு