பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ஒ 33

வந்து விட்டது. அதுவும், அக் கானவர்களால்!” என்று பலப்பல கூறினாள், தன் தாயிடம்.

தன் மகள் திடுமெனவந்து, இவ்வாறு ஏதேதோ கூறக் கேட்ட செவிலி, "மகளே! நாட்டில் நடவாதது என்ன நடந்து விட்டது? கானவர் யாருக்கு என்ன பிழை புரிந்து விட்டனர்; அவரால் யாருடைய கற்பிற்குக் கேடு வந்து விட்டது: அக்கேடு வந்தவாறு எவ்வாறு? எல்லாவற்றை யும் விளங்கக் கூறு," என்றாள். உடனே தோழி, ஆற்று நிகழ்ச்சியை எடுத்துக் கூறி, "அம்மா! நீ வளர்த்த அவள், அவ்விளைஞனையே மணந்து கொள்ளுதல் வேண்டும். அவள் அவனையே கணவனாகக் கொண்டு விட்டாள். அவள் பெய் எனச் சொல்லின், மழை பெய்யும். அவ்வளவு சிறந்த கற்புடையவளாகி விட்டாள். ஆனால், அவள் பெற்றோரோ, அவளை அவனுக்குத் தர மறுத்து விட்ட னர். அதனால் அவள் ஆற்றொணாத் துயர் உறுகிறாள். அவள் துயர் நம் குடியின் ஆக்கத்தைக் கெடுத்து, அழிவைத் தேடி வந்து தரும்!” என்று கூறினாள். அது கேட்ட செவிலி, "அவ்விளைஞன் யாவன்? அவன் தகுதி யாது? நம் மகளை மணந்து கொள்ளத் தக்க மாண்புடை யனோ?” எனக் கேட்டாள்.

அது கேட்ட தோழி, "அம்மா! அவன் ஓர் உயர்ந்த குடியில் பிறந்தவன். அவன் நாடும் வளம் நிறைந்த நாடு. அவன் நாட்டில், தினைப் புனத்துப் பரண்மீது அமர்ந்து காவல் புரியும் மகளிர், தம் மயிர் ஈரம் போகப் புகைக்கும் அகிற்புகை, வானவெளி முழுதும் சென்று பரவ, அப்புகை யுள் மூழ்கிய முழுமதியின் ஒளி மழுங்கிய அத் தோற்றத் தோடே, அது மலையுச்சியைச் சென்று அடைய, தம்

குறிஞ்சி-3