பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 争 புலவர் கா. கோவிந்தன்

நாட்டு மலைகள், எண்ணற்ற தேன்கூடுகளைக் கொண்டி ருப்பதால், எங்கு நோக்கினும் தேன் கூடுகளையே கண்டு பழகிய ೨|೧೯T நாட்டு மக்கள், அம் மதியையும் தேன்கூடு என்றே கருதி, அதைக் கொணர்வான் வேண்டி மூங்கிலேணி இட முனைவர். அத்துணை வளம் நிறைந்தது அவன் நாடு. மேலும், துன்பத்தில் ஆழ்வார் யாவரேயாயி னும், அவர் துயர் துடைத்தல் மக்களின் தலையாய கடனாம், எனக் கருதும் அருள் உள்ளம் உடையவன் அவன். அவ்வளவு சிறந்தான்ை நாம் எளிதில் பெற்று விடல் இயலாது. கிடைத்தற்கரியனாய அவனுக்கு நம் மகளை மணம் செய்து தர மறுத்தல் மதியுடையோர் செயலன்று. மேலும், அஃது அறமும் ஆகாது!" என்றாள்.

அவள் கூறியன கேட்ட செவிலி, தம் பெண்ணின் காதல் உறுதியுடைத்து, அது வாழ, வழி செய்தலே விழுமிய அறமாம் எனத் தெளிந்து, அவளைப் பெற்ற நற்றாயிடம் சென்று, நடந்ததை நிரலே எடுத்துக் கூறினாள். தன் மகள், காதல் ஒழுக்கத்திலும், கற்பு நெறியிலும் சிறந்து விட்டாள் என்பது கேட்டு மகிழ்ந்த அத்தாய், அதை அப்பெண்ணின் தந்தையும் தமையன்மாரும் சினவாது கேட்டு இசையும் வண்ணம் எடுத்துரைக்கவல்ல வகைகளையும், அதற்கேற்ற காலத்தையும் தேர்ந்து சென்று, அவர் ஏற்குமாறு இனிது எடுத்துக் கூறினாள். -

தாங்கள் எவனுக்குத் தம் மகளை மணம் செய்துதர மறுத்தனரோ, அவனையே தம் மகள் காதலித்துள்ளாள். மறுத்து அனுப்பிய அவனைத் தாமே சென்று வருந்தி அழைத்து வந்து மணம் செய்து அனுப்புதல் வேண்டும் என்பதை அறிந்தவுடனே, அவர் மானம் கெடக் கடுஞ்