பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 35

சினம் பிறந்தது. கண்கள் சிவப்பேறின. பெரிய வில்லும் சிறந்த அம்பும் ப்ெற்றிருந்தும் என்னாம்? இவற்றால் நம் மானத்தைக் காத்துக் கொள்ள முடியவில்லையே! இவை யிருந்து என்ன பயன் என வெறுத்து, அவற்றை நோக்கினர். ஒரு சில நாழிகை, உள்ளம் கொதிப்பேறச் சினத்தால் ஒன்றும் புரியாது உழன்றனர். பின்னர்த் தம் மகளைப் பெற்ற அருமை, அவள் மாண்பு, அவள் காதற் சிறப்பு, கற்பின் பெருமை, அவ்விளைஞன் ஆற்றல், அருள், அவன் குடிப் பெருமை, தம் கடமை ஆக இவற்றையெல் லாம் ஒவ்வொன்றாக உணர்ந்து, சினம் மாறித் தம் பெண் னிடத்தோ, அவ்விளைஞனிடத்தோ குற்றம் இல்லை, இது காலம் செய்த குற்றம் எனத் தெளிந்து, அவளை அவனுக்கே மணம் செய்து தர இசைந்தனர்.

அவர் இசைந்தது அறிந்து மகிழ்ந்தாள் தோழி. ஆயினும் அவளும் அவனும் கொள்ளும் திருமணம், விரைவில், மேலும் இடையூறு எதுவும் நேராமல், இனிது முடிய வேண்டுமே என்று கவலைகொண்டாள். அதனால், மகிழ்ச்சியளிக்கும் அச் செய்தியை அப் பெண்ணிற்கு அறிவித்து, அவளையும் உடன் கொண்டு சென்று, ஊரை. அடுத்துள்ள குன்றில் கோயில் கொண்டிருக்கும் குமரவேள் மகிழ்ந்து அம் மணத்திற்குத் துணைபுரிவான் வேண்டி, அவனை வணங்கி, வழிபட்டு, அவன் விரும்பும் குரவைக் கூத்தை அவன் முன் ஆடத் தொடங்கினாள் அவ்வாடற்குரிய பாட்டாய கொண்டு நிலைச் செய்யுளைத் தொடங்குமாறு அப் பெண்ணை வேண்டிக் கொண்டாள். அவள் தொடங்கிப் பாட, அவளைப் பின்பற்றி இவள் பாட, இருவரும் கீழ்வரும் பொருள் அமைந்த பாடலை மாறி மாறிப் பாடிப் பரவினர்.