பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒ. புலவர் கா. கோவிந்தன்

"நான் மனங்கொள்ளும் அந் நன்னாளன்று, தாம் பண்டு மறுத்த ஒருவனுக்கே, தம் மகளை மணம்செய்து கொடுக்க நேர்ந்தமை கண்டு நானும் நம் உறவினர், தம் நாண்கெட்ட அந்நிலையினை எவ்வாறு தாங்கிக் கொள் வரோ? உண்மையில், தாங்கற்கரிய ஒன்றைத் தாங்கவல்ல அவ்வாற்றலை, அவர் என்ன தவம் செய்து பெற்றனரோ? நிற்க, நம் திருமணம், வேங்கைப் பூவின் பொன்னிற மகரந்தப் பொடிகள், பொற்றுகளைப் பரப்பினாற் போல் உதிர்ந்து கிடக்கும் நம் மனை முன்றிலில், நாட்டார் அறிய நடைபெறும் அன்றோ? அவ்வாறு, பலர்அறி மணத்தை மேற்கொண்ட அன்றே, அம் மணத்தையே எப்போதும் எண்ணியிருந்தமையால், மணம் நடப்பதாகப் பலகால் கனவில் கண்டு கண்டு மகிழ்ந்த அக்கனவுத் திருமணத்தை இனிக் காணாது விடுமன்றோ?' என்ற பொருள் அமைய வந்த பாட்டை அவள் முன்னாகப் பாடினாள்.

அதைத் தொடர்ந்து, "விண்ணைத் தொடும் மலை நாட்டானாய் நின் காதலனும் நீயும், திருமணத்தின்போது ஒருவரை யொருவர், இதற்கு முன் பார்த்துப் பழகியறியாத புதியவர் போல் நடிப்பீர்களோ? அவ்வாறு நீங்கள் நடிப்பின், நானும், உங்கள் இருவருக்கும் உள்ள உறவினை அறிந்தும் அறியாதாள்போல், நடிப்பன். நிற்க. மணவினை கண்டு தோன்றும் மகிழ்ச்சியால் மனத்தில் உளவாம் நாணத்தாலும், என் நடிப்பைக் கண்டு நகை பிறக்கும். என்ற அச்சத்தாலும், நீ, நின்காதலன் மணக்கோலத்தையும் காணாவாறு, கண்களை மூடிக் கொள்ளுதல் கூடாது. அவன் மணக் கோலத்தைக் காணாத கண்கள் உண்மையில் காணும் கண்களா? காணாக் குருட்டுக்