பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 37

கண்களாம்!” என்ற பொருள் அமைத்துத் தோழி பாடினாள்.

அது கேட்ட அப்பெண் அப்பாட்டைத் தொடர்ந்து, "நான் என் கண்களை மூடிக்கொள்வதால், என்ன கெட்டு விடும்? உன் கண்களையே என் கண்களாகக் கொண்டு காண்பேன். நீ காண்பது நான் காண்பதன்றோ! நீ கண்டால் அதுவே அமையும். நான் வேறு காண வேண்டு - வதில்லை!" என்ற கருத்தமைந்த பாட்டைப் பாடினாள்.

அதுகேட்ட தோழி, "அதுநின் கருத்தாயின், நெய்தல் மலர்போல், மைதீட்டப் பெற்ற அழகிய நின் கண்கள், என் கண்கள் ஆகுக. அதாவது காணும் என் கண்களைப் போன்றே, நின் கண்களும் அம் மணக் கோலத்தைக் கண்டு மகிழ்க!" என்ற பொருள் பொதிந்த பாட்டைப் பாடி, ஆட்டத்தை முடித்தாள்.

சில நாட்கள் கழிந்தன. பெண்ணின் பெற்றோர், மனம் மாறி, மணவினைக்கு இசைந்தனர் என அறிந்த இளைஞனின் பெற்றோர், மீண்டும் மணம் பேச வந்தனர். முன் போல், இம்முறையும், மண முயற்சி தடையுறுதல் கூடாது எனும் கருத்தோடு, கணி நூலை நன்கு கற்றோனும், இவர் இருவரும் மணந்து மணமக்களாதல் தகும்! எனக் கூறும் தன் சொல், கூறியவாறே முடியுமாறு கூற வல்லோனுமாய கணி ஒருவனைக் கொண்டு நன்னாள் தேர்ந்து, அந்நாளில், எச் செய்தியையும், வகுத்தும், தொகுத்தும் கூறி வெற்றி காணும் சான்றோர் களையும் உடன் கொண்டு மணம் பேச வந்தனர். அது கண்ட தோழி, அப்பெண்ணின்பால் ஓடி, "என் ஆருயிர்