பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ཧྰུཾ ཌི་ புலவர் கா. கோவிந்தன்

அணையாய்! நின் தோள் உற்ற தளர்ச்சியும், அத்தளர்ச்சி கண்டு அயலார் கூறும் அலரும், திருமணம் நடைபெற்ற தாக, நாள்தோறும் கனவில் கண்டு கண்டு கலங்கும் கலக்கமும் எல்லாம் ஒரு சேர அழியுமாறு , அவன் அதோ வந்து விட்டான். இனி, நின் கவலை யொழிந்து, கண் ஒளிவீசக் கவின் பெற்றுச் சிறப்பாயாக!” என வாழ்த்தி னாள். வாழ வழி வகுத்து, வாழ்த்திய அத்தோழி வாழ்க! இந் நாடகத்தை நாடறியக் காட்டும் நல்ல படம் இதோ! கண்டு களி கூர்க!

"காமர் கடும்புனல் கலந்து எம்மோடு ஆடுவாள் - தாமரைக்கண் புதைத்து, அஞ்சி, தளர்ந்து, அதனோடு ஒழுகலால் நீள்நாக நறும்தண்தார் தயங்கப் பாய்ந்து, அருளினால் பூண் ஆகம் உறத்தழிஇப் போதந்தான்் அகன்அகலம் வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி 5

அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே, அவனுந்தான்், ஏனல் இதனத்து அகிற்புகை உண்டு

இயங்கும் தேனின் இறால் என ஏணி இழைத் திருக்கும் கான்அகல் நாடன் மகன்; -

சிறுகுடியிரே! சிறுகுடியிரே! வள்ளி கீழ்விழா வரைமிசைத் தேன் தொடா, கொல்லை குரல்வாங்கி ஈனா, மலைவாழ்நர் அல்ல புரிந்துஒழுக லான்; . காந்தள் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின் 15