பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 39

வாங்கு.அமை மென்தோள் குறவர் மடமகளிர் தாம்பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம்மையரும் தாம் பிழையார் தாம்தொடுத்த கோல்;

எனவாங்கு, . அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட 20

என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்; அவரும், தெரிகணைநோக்கிச், சிலநோக்கிக் கண்சேந்து, ஒருபகலெல்லாம் உருத்தெழுந்து, ஆறி இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை; 25 தெரியிழாய்! நீயும் நின்கேளும் புணர . வரைஉறை தெய்வம் உவப்ப, உவந்து குரவை தழிஇ யாம்ஆடக், குரவையுள் கொண்டு நிலைபாடிக் காண்; நல்லாய்! 30

நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைத் தம்நாண்தாம் தாங்குவார் என்நோற்றனர் கொல்; புனவேங்கைத் தாது உறைக்கும் பொன்னறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ ! . நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே, 35

கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ! விண்தோய் கல்நாடனும் நீயும் வதுவையுள் பண்டு அறியாதீர்போல் படர்கிற்பீர் மன்கொலோ! பண்டு அறியாதீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போல் கரக்கிற்பென் மன்கொலோ, 40

மைதவழ் வெற்பன் மனஅணி காணாமல், கையால் புதைபெறுாஉம் கண்களும் கண்களோ?