பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இ. புலவர் கா. கோவிந்தன்

என்னைமன், நின்கண்ணால் காண்பென்மன் யான், நெய்தல் இதழ்உண்கண், நின்கண் ஆகு; என்கண் மன்;

எனவாங்கு, 45

நெறியறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவினை முந்துறிஇ தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக வேய்புரை மென்தோள் பசலையும், அம்பலும், மாயப்புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்கச் சேய்உயர் வெற்பனும் வந்தனன், 50

பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே.”

தம் மகளை, அவள் காதலித்தான்ுக்குத் தரப் பெற்றோர் மறுப்பதறிந்த தோழி, அப் பெண்ணிற்கும், அவனுக்கும் காதல் உண்டாய வரலாற்றினைக் கூறிச் செவிலிக்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத் தொடு நிற்ப, அவள் தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நிற்ப, அவரும் ஒருவாறு உடன்பட்டதைத் தோழி தலைவிக்குக் கூறி, அவர் மணம் விரைவில் முடிதற் பொருட்டு, வரையுறை தெய்வத்திற்குக் குரவையாட, அவன் வரைய வருதல் அறிந்து தலைவிக்கு உரைத்தது எனும் துறையமைய வந்துளது இச் செய்யுள்.

உள்ளுறை: மிக்க ஒளிபொருந்திய திங்கள், புகையால் மறைப்புண்டு, ஒளி மழுங்கித் தோன்றுவதால், அதைக் கைப்பற்றிப் பயன் கொள்ளக் கருதுதல் போல், புகழ் மிக்க தலைவனும், தன் அருட்குணத்தால் ஆற்றில் பாய்ந்து அவளைக் காப்பாற்றியதனால் எளியனாதல் கருதி, அவனை மணந்து கொள்ளக் கருதினர் என உள்ளுறை உவமம் கொள்க. -