பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

அகவினம் பாடுவாம்

மலையும் காடும் மண்டிக் கிடக்கும் குறிஞ்சி நிலம். அந்நிலத்தில் ஆங்காங்கே அமைந்துள்ளன. பல சிற்றுார்கள். அவற்றுள் ஒர் ஊரை அடுத்துள்ள ஒரு தினைக் கொல்லை. ஆங்கே இரு பெண்கள். ஒருத்தி, அக்குறிஞ்சி நிலத்துச் சிற்றுார்க் கோமகன் மகள். மற்றொருத்தி அவள் தோழி. இருவரும் தங்கள் தங்கள் தினைக் கொல்லை யினைக் காக்கும் கடமை பூண்டு வந்தனர்.

அவருள் ஒருத்தி, அந்த ஊர்த் தலைவன் மகள். சில நாட்களாகக் கவலை மிகக் கொண்டு, கடமையிலும் கருத்தின்றி, எந்நேரமும் ஏதோ ஒரு சிந்தினையில் ஆழ்ந்த வண்ணம் இருக்கத் தொடங்கினாள். அவள் மனக் கவலைக்காம் காரணத்தை அறிவாள் அத்தோழி. அவர்கள் ஊரை அடுத்திருந்த மற்றோர் குறிஞ்சி நிலத்து ஊரில் சிறந்த குடியில் பிறந்த ஓர் இளைஞன் உளன். அவனும், இவளும் காதல் கொண்டிருந்தனர். காதல்