பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 43

கொண்ட நாள் முதல், நாள்தோறும் தவறாது வந்து, அவளோடு சிறிது நேரம் அளவளாவி மகிழ்ந்திருந்து செல்லும் இயல்புடைய அவன், சின்னாட்களாக வந்திலன். அவன் வராத காரணம் தெரிந்திலது. அதனால், அவள் கவலை அதிகமாயிற்று. அதே எண்ணமாய் எப்போதும் ஏக்கங் கொண்டிருக்கத் தொடங்கினாள்.

இவ்வாறு நாள் முழுவதும் கவலை கொண்டிருத்தல், அவள் உடல் நலக் கேட்டிற்குக் காரணமாம் என உணர்ந்து, அவள், தன் கவலையைச் சிறிது நேரமாவது மறந்து மகிழ்ந்திருக்க மார்க்கம் தேடினாள் தோழி. ஆடல் பாடல் அகத்தின் கவலையை மாற்றி மகிழ்ச்சியூட்டும் என்பதை அவள் அறிவாள். அதனால், ஒரு நாள் அப்பெண்ணை நோக்கி, "எந்நேரமும் இவ்வாறு கவலை கொண்டிருத்தல் கூடாது. சிறிது நேரம் ஆடிப்பாடி அகம் மகிழலாம், வா!” என அழைத்தாள். ஆனால், ஆடல் பாடல்களில் அப்பெண்ணிற்கு ஆர்வம் உண்டாக வில்லை. ஆயினும் அவள் வேண்டுகோளை மறுக்கவும் முடிய வில்லை. ஆகவே, அதற்கு இசைந்தாள். ஆனால், வெறும் ஆடல் பாடல் மட்டும் தனக்கு ஆறுதல் அளித்து விடாது; ஆகவே, தன் உள்ளத்திற்கு ஊக்கம் ஊட்டும் வகையில் அவற்றை அமைத்துக் கோடல் வேண்டும் என விரும்பினாள்.

உடனே தோழியை அழைத்துத், "தோழி! நீ விரும்பியவாறே ஆடலாம் பாடலாம். ஆனால் ஒன்று. நாம் பாடும் பாட்டு உலக்கைப் பாட்டாக இருக்கட்டும். அப் பாட்டின் பொருள், தான்் தந்த காதல் நோய்க்குத்