பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புலவர் கா. கோவிந்தன்

தான்ே மருந்தாவதல்லது, பிறிதொரு பொருளால் தீர்க்க லாகாக் கொடுமை வாய்ந்த காதல் நோயைக் கொடுத்து விட்டு, மீண்டும் நம்மைக் கருதாது மறந்து போன கொடியோனாய, அவ்விளைஞனுக்குரிய மலையாய் இருப்பதால் வளம் அற்று வறண்டு போக வேண்டியதாக வும், அவ்வாறு ஆகாது, அதற்கு மாறாக, வளம்பல பெற்று வனப்புடன், அதோ தோன்றுகிறதே அவன் மலை! அதைப் பற்றியதாகட்டும்," என்றாள். அவளும் அதற்கு இசைந்தாள். -

உடனே அரும்பு வளருமளவு முற்றியதனால் மணம் வீசும் சந்தன மரத்தாற் செய்த் ஓர் உரலையும், முத்து உதிருமளவு முதிர்ந்து நீண்ட இரு தந்தங்களையும் கொண்டு வந்தனர். கொல்லையில், முற்றித்தலைசாய்த்துக் கிடக்கும் தினைக் கதிர்களைக் கொண்டு வரச் சென்றனர். ஆண்டு, அவர்கள் கண்ட கதிர்க் காட்சி, அவர்கள் உள்ளத்தில் மற்றொரு காட்சியைக் கொண்டு வந்து காட்டிற்று. தம் வீடு நோக்கி வரும் விருந்தினரை, அவர் சேய்மைக்க்ண் வரும்போதே அகம் மகிழுமாறு, அன்போடு பார்த்து, அவர் அண்மையில் வந்தக்கால், அவர் உள்ளம் உவக்கும் இன்சொற்களை வழங்கி வரவேற் கும் நற்குடிப் பிறந்த மகளிர்பால் செருக்கு நில்லாது, அவர்பால் என்றும் நாணமே குடிகொண்டிருக்கும். நாண் நிறை அந்நல்லார், பணிவு தோன்ற நிற்கும் காட்சியை, முற்றி விளைந்த கதிர்கள் நினைப்பூட்ட, அம் மகிழ்ச்சியால் சிறிது நேரம், தம்மை மறந்து நின்றனர். பின்னர், அக் கதிர்களிற் சிலவற்றைக் கொய்து