பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி & 45

கொணர்ந்து உரலில் இட்டனர். யானைத் தந்தத்தாலாகிய

உலக்கைகளைத் தம் கையிற் பற்றி, மாறி மாறி இடித்துக் கொண்டே, பாட்டையும் பாடத் தொடங்கினர்.

கையில் உலக்கையைத் தாங்கி நிற்கும் அப் பெண்ணைக் கண்டாள் தோழி. அவள் அழகிய நெற்றி, அடர்ந்த கூந்தல், மூங்கிலைப்போல மென்மை வாய்ந்து பருத்த தோள், மலர்சூடி மணம் நாறும் தலைமுடி எனும் இவை கொண்டு நிற்கும் அவள் காட்சியைக் கண்டாள். கண்ணிற்கு விருந்தளிக்கும் இக்கவினெல்லாம் அவனைப் பற்றிய கவலையால் கெடுகின்றனவே என்ற எண்ணம் அவள் உள்ளத்தையும் சிறிதே துன்புறுத்திற்று. தான்ே கவலின் அவளும் கவல்வள் என்று அஞ்சினாள். உடனே அச் சிந்தனையைச் சிதைத்துவிட்டு அப் பெண்ணை நோக்கித் தோழி! தன்பால் மூங்கில்களிடையே, காற்று வீசுவதால் எழும் ஒலி, நமக்குங் கேட்கும் அத்துணை அண்மையில் உள்ள அவன் மலையை, முன்போல் பழிக்காது, பாராட்டி ஒரு பாட்டுப் பாடுவாயாக! பின்னர் நான் பாடுகிறேன்," என்றாள். ஆனால், அவள் தயங்கி னாள். பாடுமளவு அவள் உள்ளம் இன்னமும் தெளிய விலலை என்பதை உணர்ந்து, முதலில் தான்ே பாட்டைத் தொடங்கினாள்.

பாடத் தொடங்கியவள், அவ்விளைஞன் உற்றாரைக் கைவிடும் ஒழுக்கம் உடையவன் என்ற உணர்வினாலேயே இந்தப் பெண், அவனைப் பழிக்கிறாள். ஆனால், அவன் அத்தகையன் அல்லன் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும், எனக் கருதினாள்.