பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒ. புலவர் கா. கோவிந்தன்

அதனால், தான்் பாடிய பாட்டில், “அவன் நாட்டு மலைகளில், தங்கள் குலக்கடவுளாம் குமரவேள் இருக்கும் குன்றை நோக்கி, அவன் மலைநாட்டு மகளிர் கூப்பித் தொழும் கைகளைப் போல, மலர்ந்திருக்கும் காந்தள் மலர் களில் நிறைந்திருக்கும் உயர்ந்த இனிய தேன், கொள்வார் வந்து கொள்வதற்கு இயலாது. மலர்கள் காற்றால் அசைப் புறுவதால், கீழ் வீழ்ந்து, வீணாதலைக் காணும் அவன், தன் காதலியும், தான்் வந்து மணந்து கொள்வதற்கு முன்னரே, மனக்கவலையால், தன் நலத்தைக் கெடுத்துக் கொள்வளோ எனும் கருத்தால் விரைந்து வந்து வரைந்து கொள்வன். அப் பண்பு அவன்பால் உண்டு. தன் அருள் வேண்டித் தன்பால் அடைந்தாரின் துயர் போக்கித் துணை புரியும் பண்புடையவன் அவன்!" என்ற பொருள் அமைத்துப் பாடிவிட்டு, "ஆகவே, தோழி! அவனைப் பழித்துப் பாடுவதை விடுத்துப் புகழ்ந்து ஒரு பாட்டுப் பாடுவாயாக!” என்று வேண்டிக் கொண்டாள்.

ஆனால், அவ்வாறு வேண்டிக் கொண்டும், அப் பெண் பாடினாளல்லள். அது கண்ட தோழி, மீண்டும் தான்ே பாடத் தொடங்கினாள். அப் பெண் இன்னமும் மனந்தெளியாமை கண்டு, அவள் தெளியுமாறு, மீண்டும் அவன் புகழையே தன் பாடற்பொருளாகக் கொண்டாள். "தோழி! அம் மலைநாட்டு மகன் நின்னை மறந்து விட் டான் என மனங்கவலற்க அவன் அத்தகையான் அல்லன். தான்் காதலித்த ஒரு பெண் மனக் கவலையால் தன் இயற்கை நலம் கெட்டு வருந்துவளாயின், அவள் வருந்துவ தினும் மிக வருந்தும் மாண்புடையான் அவன். மேலும், தான்் காதலித்த ஒரு பெண்ணை, எனக்கு மணம் செய்து