பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி * 47

தாருங்கள்! என அப் பெண்ணின் உறவினர்.பால் சென்று கேட்கும் மக்கட் சாதியினரைப் போன்ற, அவன் மலைவாழ் ஆண் குரங்கு, தான்் விரும்பும் பெண் குரங்கைத் தனக்குத் தருமாறு, தன் இனக் குரங்குகள்பால் சென்று குறை கூறும். அந்தக் காட்சியை நாள்தோறும் காண்பவன் அவன். அவன் மலைவாழ் குரங்கிடத்தே காணும் இக் குணம், மாண்பு நிறை மகனாகிய அவனிடத் தும் அமைந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆகவே, அவன், உன்னை மணம் செய்து தருமாறு, நம் பெற்றோர் பால் மணம் பேச விரைவில் வருவன். இது உறுதி. ஆகவே, கவலை கொள்வதோ, அவனைப் பழிப்பதோ செய்யாது, மகிழ்ந்து பாராட்டி, ஒரு பாட்டுப் பாடுவாயாக!” என்ற பொருளமைத்துப் பாடி வேண்டிக் கொண்டாள்.

தோழி. அவ்வளவும் கூறி, இரு முறை வேண்டியது கண்டு, அப் பெண்ணின் உள்ளமும் பாட ஒருவாறு இசைந்தது. பாட இசைந்ததே யாயினும், அவனைப் பாராட்ட ஒருப்பட்டிலது. அந்த அளவு அவள் மனம் இன்னமும் தெளியவில்லை. தளர்ந்து, தன் அழகு இழந்து காணும் அவள் உடல், அது பண்டு பெற்றிருந்த பேரழகை நினைப்பூட்டிற்று. அதனால் கலங்கிற்று அவள் உள்ளம். முறுக்கற மலர்ந்து, மகரந்தம் நிறைந்து, மணம் நாறும் மலர்களால் நிறைந்து தாழ்ந்துள்ள ஒரு கிளையில், அம் மலர்களின் மகரந்தம் படியுமாறு, நெருங்கத் தழைத்த தளிரைப் போலச் சுணங்கும் மாமையும் பெற்றுப் பேரழகு தோன்ற விளங்கிய தன் பண்டைய நிலையினையும், அது, பசலை பாய்ந்து வனப்பிழந்து தோன்றும் இன்றைய நிலை யினையும் கண்டு கலங்கினாள். உடனே, இந்நிலைக்குக்