பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இ. புலவர் கா. கோவிந்தன்

காரணமாய்ப் பிரிந்து மறந்து வாழும் அவ்விளுைன்பால் கடுஞ்சினம் தோன்றவே, அவனைப் பாடாதிருந்தால் மட்டும் போதாது, அவனைப் பழிக்கவும் வேண்டும் என்று எண்ணினாள். அதனால் தன் தோழியை அழைத்துத், "தோழி! மலைச் சாரலைப் பாடுகிறேன். ஆனால் பாராட்டி அல்ல, பழித்து!" என்று கூறினாள்.

பழித்துப் பாடத் துணிந்ததோடல்லாது, பாடவும் தொடங்கி விட்டாள். "தேன் நிறைந்த மலரைத் தேடிச் சென்று, அதில் உள்ள தேனை உண்டு, பின்னர், அம் மலரை அறவே மறந்து போகும் வண்டுகள் வாழும் மலை, அவன் மலை. ஆகவே, அவ் வண்டின் குணம் அம் மலைக்குரியோனாய அவனிடத்தும் பொருந்தியிருப்பதில் வியப்பில்லையன்றோ? அதனால் பெண்ணொருத்தியைக் காதலித்து, அவள்பால் பேரின்பம் நுகர்ந்துவிட்டுப் பின்னர் அவள் அழகு கெட்டு வாட, அவளை அறவே மறந்து போகும் மாண்பு அவன்பாலும் நிலைத்துவிட்டது. ஆனால், அவன் இயல்பு இது, அவன் மலைவாழ் வண்டின் இயல்பு இது என்பதை அறியாது, விண்ணைத் தொடும் மலையுச்சியில் பந்தாடி இளைத்த தெய்வ மகளிர், அத் தளர்ச்சி போகக் குளிர்ந்த நீரிற் படிந்து ஆடல் வேண்டி, அதற்காக அவன் மலையிடத்து அருவியைத் தேடி வருகின்றனரே! என்னே அவர் அறியாமை " இவ்வாறு, பழித்துப் பாடி முடித்தாள்.

அப் பெண், அவ்விளைஞன் வந்திலனே என்ற வருத்தத்தினால் அவ்வாறு பழி தூற்றினும், அவன் அத்தகையன் அல்லன். அவள் மாட்டுப் பேரன்பு கொண்டுள்ளான். அவளை மணந்து, இடையறவுபடா