பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இ. புலவர் கா. கோவிந்தன்

இக்களவொழுக்கம், இவளுக்குத் துன்பம் தருவதாய் உளது. ஆகவேதான்் இவள் இவ்வாறு பழித்துப் பாடுகிறாள் என்ற உணர்வு பிறந்தது. அதனால், அவளை விரைவில் மணந்து கொள்ளத் துணிந்தான்். துணிந்தவாறே, சின்னாட்களுக்கெல்லாம், உற்றார் உறவினர் சூழ, அப்பெண்ணின் தந்தைபால் மணம் பேச வந்தான்். அவன் வருகை கண்ட தோழி, விரைந்து சென்று வணங்கி வாழ்த்தினாள். அவளிடத்தில், அவர்கள் அன்று பாடிய வள்ளைப் பாட்டை நினைப்பூட்டி, அதன் பலனாகவே, இவ்வளவு விரைவில் மணத்திற்கு ஏற்பாடு செய்தே னெனக் கூறினான். அது கேட்ட தோழி, அப்பெண்ணின் பால் விரைந்து ஓடிச், செய்தியை விளங்கக் கூறி, மகிழ்ந்து வாழ்த்தினாள்.

அவர்கள் பாடிய வள்ளைப் பாட்டையும், அதன் பயனையும் கூறும் பாட்டு இது:

"அகவினம் பாடுவாம் தோழி! அமர்க்கண், நகைமொழி நல்லவர் நானும் நிலைபோல் தகைகொண்ட ஏனலுள் தாழ்.குரல் உரீஇ, முகைவளர் சாந்து உரல், முத்தார் மருப்பின்

வகைசால் உலக்கை வயின்வயின் ஒச்சிப், 5 பகையில் நோய் செய்தான்் பயமலை ஏத்தி அகவினம் பாடுவாம் நாம். ஆய்நுதல், அணிகூந்தல், அம்பணைத் தடமென்தோள், தேனாறு கதுப்பினாய்! யானும்ஒன்று ஏத்துகு;

வேய்நரல் விடரகம் நீஒன்று பாடித்தை 10 கொடிச்சியர் கூப்பி வரைதொழு கைபோல்