பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி 51

எடுத்த நறவின் குலையலம் காந்தள் தொடுத்ததேன் சோரத் தயங்கும், தன்.உற்றார் இடுக்கண் தவிர்ப்பான் மலை. கல்லாச்கடுவன் கணம்மலி சுற்றத்து - 15 மெல்விரல் மந்தி குறைகூறும் செம்மற்றே, தொல்லெழில் தோய்ந்தார் தொலையின், அவரினும் அல்லற் படுவான் மலை. புரிவிரி புதைதுதை பூத்ததைந்த தாழ்சினைத் தளிரன்ன எழில்மேனி தகைவாட நோய்செய்தான்் 20 அருவரை அடுக்கல் நாம் அழித்து ஒன்று பாடுவாம். விண்தோய் வரைப் பந்து எறிந்த வயா விடத் தண்தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே; பெண்டிர் நலம் வெளவித் தன்சாரல் தாதுஉண்ணும் வண்டில் துறப்பான் மலை. - 25

நடுங்கா எழில்வேழம் வீழ்பிடிக்கு உற்ற கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து நெடுஞ்சினைத் தீங்கண் கரும்பின் கழைவாங்கும், உற்றாரின் நீங்கலம் என்பான் மலை.

எனநாம், 30 தன்மலைபாட நயவந்து கேட்டருளி, மெய்ம்மலி உவகையன் புகுதந்தான்், புணர்ந்துஆரா மென்முலை ஆகம் கவின்பெறச் செம்மலை ஆகிய மலைகிழவோனே.”

தோழியும் தலைவியும் பாடிய வள்ளைப்பாட்டில், தோழி, தலைவன் இயல் வாழ்த்த தலைவி, அவன் இயலைப் பழிக்கத் தலைவன் சிறைப்புறமாக இருந்து