பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இ. புலவர் கா. கோவிந்தன்

கேட்டு வரைய வருதல் அறிந்து, தோழி தலைவிக்கு உரைத்தது என்ற துறையமைய வந்துள்ளது இச்செய்யுள்.

உள்ளுறை: காந்தளின் தேன், அம்மலர் அலைவதால், கொள்வார் வந்து கொள்வதன் முன்னரே கீழ்வீழ்ந்து பாழாதல், தலைவியின் நலம், தலைவன் வாராக் கவலை யால், அவன் வந்து வரைந்து கொள்வதற்கு முன்னரே கெடுதலாம்.

கடுவன், தன் இனத்தின்பால் சென்று, மந்தியைத்தா எனக் குறைகூறல், தலைவன், தலைவியின் பெற்றோர்பாற் சென்று, தலைவியை மணம் செய்து தர வேண்டுதலாம்.

களிறு, பிடியின் வயாவிற்கா வேண்டிக் கரும்பைத் தேடிக் கொணர்ந்து தருதல், தலைவன் தலைவியை மணந்து, அவள் கருவுற்ற காலத்து, அவள் விரும்பும் பொருளைத் தேடிக் கொண்ர்ந்து தருதலாம்.

1. அகவினம் பாடுவாம்-குரல் எடுத்துப் பாடுவோம்; வள்ளைப்பாட்டு-மகளிர் உரல் இடிக்கும்கால் பாடும் பாட்டு; அமர்-விருப்பம் தருகின்ற; 3. குரல்-கதிர் 4. முகை-அரும்பு 6. பகைஇல்நோய் மருந்து இல்லாத நோய், நோய்க்குப் பகை மருந்து: 8. பணை- மூங்கில், தட-பருத்த, ஏத்துகு-பாடுகிறேன்; 10. வேய்-மூங்கில்; நரல்-ஒலிக்கும்; விடர் அகம்-மலைப்பிளவுகளை யுடைய மலை; பாடித்தை-பாடு (பாடு-இத்தை; இத்தை சாரியை) 11. கொடிச்சி- குறப்பெண் 12. நறவு-தேன்; அலம்-அசையும், 15. கடுவன்-ஆண் குரங்கு 19. புரிவிரி-இதழ் விரியும், புத்ைதுதை - மகரந்தம் நிறைந்த ததைந்த-நெருங்கிய; 20. தகை-அழகு, 21 அழித்து-பழித்து, 22 வயா-தளர்ச்சி 26. வீழ்பிடி-விரும்பப்பட்ட பெண் யானை, 27. கடுஞ்சூல்-முதற் கருவு; வயா-கருவுற்ற காலத்துப் பெண்டிற்கு உண்டாம் ஆசை.