பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

பாடுகம் வா தோழி!

வெளங்கொழிக்கும் மலைநாடு. மா, பலா, வாழை, வேங்கை, ஆசினி முதலாம் மரங்கள் நெருங்க வளர்ந்து மகிழ்ச்சி தரும் காட்சி ஒருபால்; காட்டை அழித்து உழுது விளைத்த கொல்லையில், தினைக் கதிர் முற்றிச் சாய்ந் திருக்கும் காட்சி ஒருபால்; புனத்தின் நடுவே ஓங்கி வளர்ந் திருக்கும் ஆசினி மரத்தின் உச்சியிலே பரண் அமைத்து, அதன் மீதிருந்து காவல் புரியும் கானவர்களையும் அத் தினைக் கதிரைத் தின்னும் கருத்தோடு வரும் களிறு களையும் காணும் காட்சி ஒருபால், காலமோ இரவு. இடியும் மின்னலும் கூடிப்பெருமழை பெய்யும் நள்ளிருள். ஆகவே, இவ்வேளை காவல் மேற்கொண்டிரார். இந் நேரம், செல்லுதற்கரியதேனும், மின்னல் காட்டும் ஒளித் துணை கொண்டேனும் சென்று, தினையை வேண்டுமளவு தின்று வரலாம். காலம் இதுவே எனக் கருதி ஆண்டு வரும் யானைகள். விளைந்து முற்றிய பயிர்கள், நீரினும், காவலே