பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இ. புலவர் கா. கோவிந்தன்

நனிமிகத் தேவை என்பதை உணர்ந்து, இடியையோ, மழையையோ பொருட்படுத்தாது இரவிலும் 57೧ನು மேற்கொண்டிருப்பர் அக்கானவர். அவ்வாறு காத்துக் கிடக்கும் கானவர், இரவில் புகும் யானையைக் கண்ணால் காண இயலாது. அதன் அடியோசை கேட்டே, அது வருவதறிந்து, கவண்கல் எறிந்து ஒட்டுவர். ஆனால், இரவாதலின், குறி தவறாது எறிய மாட்டாமையால், கவணினின்றும் புறப்பட்ட கல், வந்த யானையைத் தாக்குவது விடுத்து, வேங்கை மலரை வீணாக்கி, ஆசினிப் பலாவின் பழுத்த பழுத்தைப் பாழாக்கித் தேன்கூட்டை அழித்து, மாமரத்தில் பூவும்காயுமாய்க் காய்த்துத் தொங்கும் குலைகளை நிலை குலைத்து, மாவை அடுத்துத் தாழ வளர்ந்திருக்கும் வாழையில், அதன் பூவை மூடியிருக்கும் மடலைக் கிழித்துக் கடைசியில் அதற்கு அணித்தே இருந்த வேர்ப் பலாவின் பழத்தைத் துளைத்துக் கொண்டு உட்சென்று தங்கும். இத்துணை வளம் செறிந்தது அம் மலை நாடு.

அம் மலை நாட்டில், சிற்றுார் ஒன்றின் சிறந்த குடியிற் பிறந்த ஓர் இளைஞன், தன் ஊரை அடுத்துள்ள மற்றோர் ஊரில், தன்னைப் போன்றே சிறந்த குடியிற் பிறந்தாள் ஒருத்தியைக் காதலித்தான்். அவளும் இவனைக் காதலித் தாள். அவர்கள் காதல் ஒழுக்கம் அவர் பெற்றோருக்குத் தெரியாது. அது அப்பெண்ணின் உயிர்த் தோழி ஒருத்திக்கே தெரியும். அவர்கள் காதல் வளரத் துணை புரிபவள் அவளே. ஆனால், அவர்கள் கொண்ட தொடர்பினை அவர்கள் பெற்றோர் அறியார் ஆதலின்,