பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ↔ 55

அவர்கள் ஒருவரையொருவர் கண்டு மகிழ்தல் அத்துணை எளிதில் இயலவில்லை. கண்டு மகிழப் பலமுறை முயன்றால், ஒரு சிலபோதே அது நிறைவேறும். பல முறை முட்டுப்பாடுற்று ஏமாந்து போவர். இதனால், அப்பெண் பெரிதும் வருந்தினாள், அவ்விளைஞனை இமைப் பொழுதும் பிரியாது வாழ எண்ணும் அவள் உள்ளம். அவ்வாறு பிரியாது வாழ்வதாகவே, அவளைக் கண்டு காதல் கொண்ட அன்று, அவ் விளைஞன் ஆணையிட்டு உறுதி கூறினான். ஆனால், ೨g இயலாது போவதால், அவள் பெரிதும் வருந்தினாள். அவள் உடல் தளர்ந்தது. கைவளையும் கழன்று விழலாயிற்று. இவ்வளவிற்கும் காரணம், காதல் கொண்ட தன்னை மறந்து மறைந்து வாழும் அவ்விளைஞனை எண்ணி அவன்மீது மாறாச் சினம் கொண்டாள் அவள். நிற்க,

தன் மகளின் உடற்றளர்ச்சியைக் கண்டு வருந்தி னாள் அப் பெண்ணின் தாய். அதற்குக் காரணம் யாது என்பதை அறிவதில் விழிப்பாயிருந்தாள். அதனால், தன் மகளைச் சிறிது பொழுதும் பிரியாதிருக்கத் தொடங் கினாள். அப்பொழுது ஒருநாள் இரவு பெரு மழை பெய்யத் தொடங்கி விட்டது. இடியும் மின்னலும் கூடி எவரையும் வெளிச் செல்லாவாறு செய்துவிட்டது. அக் காலம் அவ்வாறு கொடுமை மிகுந்து இருப்பதால், வெளி வருவார் எவரும் இரார். ஆகவே, தன் வருகையை எவரும் காணார். ஆதலின், அக்காலம் காதலியைக் காண்டற்கு ஏற்ற காலம் எனக் கருதி, அப்பெருமழையில் அவ்வீடு நோக்கி வந்தான்் அவ்விளைஞன். ஆனால் அந்தோ!