பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ↔ புலவர் கா. கோவிந்தன்

இழந்தால் எளிதில் விளைத்துக் கொள்ளலாம் எளிமை வாய்ந்த தினையைக் காக்கும் கானவர்களே, இடியிலும், மழையிலும் தம் காவலைக் கைவிடாது மேற் கொண்டுள்ளனர் என்றால், இழந்தால் மீண்டும் பெறலாகாப் பெருமை வாய்ந்த தன் மகள் கற்பிற்குக் களங்கம் நேர்ந்து விடுதல் கூடாதே எனும் கவலையோடு அவளைக் காத்துக் கிடக்கும் தாய் இடிக்கும் மழைக்கும் அஞ்சி அக் கவலையைக் கைவிடுவளோ? கைவிடாள் என்ற உண்மை, அவன் கொண்ட காதல் வெறியால் விளங்காது போயிற்று. அதனால், அந்நேரத்தில் ஆங்கு வந்த இளைஞன், வீட்டின் பின்புறத்தே நின்று கொண்டிருக்கும் அப் பெண்ணின் அருகே, அவள் தாயும் உடன் இருப்பதைக் கண்டான். உட்புக எண்ணி வந்த அவன் உள்ளத்திற்குப் பெரியதோர் ஏமாற்றம். அதனால் தன் காதலியை அவ்வேமாற்றம் தோன்றும் தன் கண்களால் காதல் உணர்ச்சி வெளிப்படப் பார்த்துக் கொண்டே சென்று விட்டான். அவனை அந் நேரத்தில், ஆங்குக் கண்ட அப்பெண்ணின் உள்ளத்திலும், ஆர்வமும், ஏமாற்றமும் ஒருங்கே எழுந்தன. இவ்விருவர் நிலையையும் காணாதாள் போல் கண்டு கொண்டாள் தாய்.

அன்று முதல், தன் மகளின் காதல் நாடகத்தைக் குறிப்பாற் சுட்டிக் கண்டிக்கத் தொடங்கினாள். தாயின் கடுஞ்சொல் கேட்டு, அப் பெண்ணின் விளையாட்டுத் தோழிகள் வீட்டிற்கு வாராராயினர். அவள் உயிர்த் தோழி யும் அது கேட்டு வருந்தினாள். காவல் முன்னினும் அதிக