பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி & 57

மாயிற்று. இந்நிலையை எண்ணி எண்ணிக் கடுந்துயர் உற்றாள் அப்பெண்.

இந்நிலையில், ஒரு நாள் அவ் விளைஞன் இப் பெண் னின் வீடு நோக்கி வந்தான்். வந்து அவளைக் காணலாம் இடத்தே ஒளிந்து கொண்டு, அவள் வருகையை எதிர் நோக்கியிருந்தான்். அவளும் அதைக் கண்டு விட்டாள். தன்னை மணந்து, தன் மனைக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சி தர எண்ணாது, இவ்வாறு துயர் தருகின்றனனே! முதன் , முதலாகக் கண்டு காதல் கொண்ட அன்று, "உன்னை இமைப்பொழுதும் பிரியேன். இதோ இம்மலை யில் உறையும் முருகவேள்மீது ஆணை ” எனச் சூளுரைத்த அவன், இன்று அது பொய்யாமாறு பிரிந்து மறந்திருக் கின்றனனே, என்னே இவன் கொடுமை! நான் படும் இக் கொடுமைக் கெல்லாம் இவனன்றோ காரணம்: ஆகவே, இவன் தன் தவறு உணர்ந்து, இக்களவு வாழ்க்கையைக் கைவிட்டு, மனமுயற்சி மேற்கொள்ளுமாறு, இவனுக்குப் புத்தி புகட்டுதல் வேண்டும் எனக் கருதினாள். உடனே, தோழியை அழைத்துத், தோழி! அதோ அவன் வந்துள்ளான். அவனுக்கு நம் துயர் நிலையை உணர்த்தி, மணத்தின்பால் மனம் செல்லுமாறு செய்தல் வேண்டும். ஆகவே, அவனைக் காணாதார் போல் இருந்து, அவன் கேட்குமாறு வள்ளைப் பாட்டுப் பாடத் தொடங்குவோம். அதில், நான் அவனைப் பழித்துப் பாடுகிறேன். நீ அவனைப் புகழ்ந்து பாடு. பயன் கிடைக்கும்." என்றாள். - அவளும் அதற்கு இசைந்தாள். - - -