பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இ. புலவர் கா. கோவிந்தன்

உடனே, யானைத் தந்தத்தால் செய்த இரண்டு உலக்கைகளைக் கொண்டு வந்தாள் ஒருத்தி. ஒருத்தி ஒடிச் சென்று, முறம்போல் அகன்று கிடக்கும் சேம்பின் இலை யில் முற்றி உதிர்ந்த மூங்கில் நெல்லை வாரிக் கொணர்ந் தாள். அந் நெல்லை ஆங்கிருந்த கல்லுரலில் இட்டுக் கைகளில் உலக்கையைப் பற்றி இடித்துக் கொண்டே, வள்ளைப் பாட்டை மாறி மாறிப் பாடத் தொடங்கினர்.

"நல்லோர் வாழும் நாட்டிலேயே மழை மாறாது பெய்யும் என்ப. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ப. ஆனால் நம் அன்பனோ, தான்் உரைத்த ஆணையைக் காவாதவன். ஆணை பொய்க்கும் அறனில்லாதான்் அவன் என்பதை அறிந்திருந்தும், அவன் நாட்டில் மழை பெய்கிறதே! இது என்ன வியப்போ? மழை பெய்தமையால் அவன் மலை அருவிகள், காண்பார் கண்களைப் பறிக்கும் பேரழகோடு நீர் நிறைந்து பாய்ந்தோடுவதைத் தோழி! அதோ காண்!” என்ற பொருளமைந்த பாட்டை, அப்பெண் முதற்கண் பாடினாள்.

உடனே தோழி, "மலைகள் நிறைந்த வளம் பெருகும் நாட்டிற்கு உரியனாய நம் அன்பன் வாய்மை வழுவாத வனாவான். ஆதலினாலேயே அவன் நாடு அத்துணை வளம் பெற்றுள்ளது. இயல்பாகவே வாய்மை வழுவாதோ னாய அவன், நின்னைப் பிரியேன். பிரிந்து மறந்து விடு வனோ என அஞ்சும் அச்சத்தை நீ அறவே மறந்துவிடு! என்று கூறி ஆணையிட்டு ஆட்கொண்ட தன் காதலியைக்