பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 59

காவாது கைவிடுவனோ? விடான். வாய்மை வழுவாத அவன்பால் பொய் தோன்றுமாயின், அஃது இயற்கைக்கே மர்றுபட்டதாம். என்றும் தண்ணொளியே வீசும் இயல் பினதாய திங்களில் தீத் தோன்றியதற் கொப்பாம். திங்களில் என்றேனும் தீ உண்டாமோ? உண்டாகா தன்றோ? அதைப் போன்றே அவன் உரைத்தனவும் பொய்

to:

யாகா !” என்ற பொருளமைத்துப் பாடிப் பாராட்டினாள்.

அது கேட்ட அப்பெண், "தோழி! அவன் வாய்மை வழுவான், ஆகவே நின்னை மறவான் என்று கூறு கின்றனையே. இதோ பார், என் கை வளைகள் கழன்று ஒடுவதை. இதற்கு யார் காரணம்: அவன் என்னை மறந்தமையால் வந்த வருத்தமன்றோ இதற்குக் காரணம்? இவ்வாறு என் கைவளை கழன்று போமாறு உடல் தளர்ந்து உறுதுயர் உற்று, நான் வருந்த, என்னை மறந்து போன கொடுமையுடையனாகவும், அவன் மலைகளில் மழை தரும் மேகங்கள், நாள்தோறும் தவறாது வந்து படிகின்றனவே. இஃது என்ன வியப்போ!' எனப் பழித்துப் பாடினாள்.

அவள் பாடி முடித்ததும், தோழி, "நம் அன்பன் யார் துயர் உறினும், எவ்வுயிர் துயர் உறினும், அத்துயர் காணப் பொறாது இரங்கும் அருள்நிறை உள்ளம் உடையவன். அவ்வாறு தன்னோடு தொடர்பில்லாத உயிர்கள் மாட்டும் அருள் சுரக்கும் உள்ளம் வாய்ந்த அவன், தன் மாட்டு அன்புடைய தன் காதலியின் துயர் துடைக்கி வாராது வாள்ா இருப்பானோ? வாராது தில்லான். வந்து துயர் துடைப்பன். இது உறுதி. ஆகவே வருந்தற்க சுற்றி அண்மந்த