பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 参考 புலவர் கா. கோவிந்தன்

கரை நான்கிலும் மரங்கள் நிறைந்து நிழல் தரக், குளிர்ந்த நீர் நிறைந்த குளத்தில் மலர்ந்திருக்கும் குவளை மலர், அது அக் குளத்து நீரில் இருக்கும்போதே வெம்மையில் வாடி வதங்கிப் போவதுண்டோ? இல்லைய்ன்றோ? அருள் நிறைந்த உள்ளம் உடையோனாய அவன்பால், தன் காதலி தன்னைக் காணாது வருந்தி வாட, அத்துயர் கண்டும், விரைந்து சென்று துடைக்க எண்ணாது வாளா இருத்தல் போலும் கொடுமை நிகழின், அது, குவளை மலர், குளத்து நீரிலேயே வாடியது போலாம். ஆனால் அக்குவளையும் வாடுவதில்லை; அவன் அன்பும் குறைவதில்லை!” என்று பாடிப் பாராட்டினாள்.

உடனே, அப்பெண், "தோழி! வாராது நில்லான், வருவன் என நாளைக்கு நடைபெறப் போவதைக் கூறு கின்றனையே. இப்போது நடந்தது என்ன? என்னைக் காதலித்த அவன், என்னை மறந்து மறைந்து வாழ்கின்றான் என்பதை நீ மறுக்க மாட்டாய். அவ்வாறு மறந்து, துறந்த மாண்பிலான் மலையாய் இருந்தும், கோடையின் கொடுமையால் வறண்டு வெளிறித் தோன்றாது, மாறாக, மழை பெற்று, மரமும் செடியும் மண்டித்தழைக்க, தொலை நின்று காணுவார்க்குப் பருநீல மணிபோலத் தோன்றுகிறதே, இது என்ன வியப்பு!" என்று பழித்துப் பாடினாள்.

அது கேட்ட தோழி, "தொடர்ந்து நிற்கும் பல சிறு மலைகளைக் கொண்ட நாட்டிற்குரியோனாய நம் அன்பன் நின்னைத் துறந்து விட்டான் எனக் கருதித் துயர்