பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 61

கொள்ளற்க அவன் உன்னைத் துறவான். நாம் கொண்ட இத்தொடர்பு அன்பை அடிப்படையாகக் கொண்டது. அவ்வன்புத் தொடர்பினுள், அவன் நம்மை மறந்து துறப்பது போலும் கொடுமை நிகழாது. அது அவன் பெற்றுள்ள பெரும் புகழைக் கறைப்படுத்தி விடும். புகழ் கெட வாழும் கொடியவன் அல்லன் அவன். அவன் வாழ்க்கையில், அதுபோலும் பழிநேரின், அது வானத்தில் விளங்கித் தோன்றும் ஞாயிற்றின் இடையே இருள் தோன்றியது போலாம். அவ்வாறு என்றும் நடைபெறாது. ஆகவே அவனைப் பழிக்காதே!” என்றுபாடினாள். அவள் பாடிய அப்பாட்டோடு, அவர்கள் பாடிய அவ்வள்ளைப் பாட்டும் முடிந்தது.

தன் காதலியைக் காணவந்த அவ்விளைஞன், ஆங்கு அவளும் அவள் தோழியும் பாடத் தொடங்கியது கண்டு, அவர் பாட்டைக் கேட்டு மகிழ வேண்டும் எனும் விருப் போடு ஒருபால் ஒதுங்கி நின்றான். ஆனால் அவர்கள் பாடிய பாட்டு, களவொழுக்கத்திலேயே இன்பம் உளது எனக் கருதி, அதையே விரும்பும் தன் செயலால், தன் காதலி எவ்வளவு துயர் உறுகிறாள் என்பதை உணர்த்தி விட்டது. உடனே அவ்விடத்தை விட்டகன்றான். ஊர் சென்று உற்றார் உறவினரை உடன் கூட்டிக்கொண்டு, அப்பெண்ணின் பெற்றோர்.பால் மணம் பேச வந்தான்். வந்த அவர்களும், அப்பெண்ணின் உற்றார் பெற்றோர் களும், அவர்கள் வீட்டின் முன்புறத்தே தழைத்து வளர்ந்திருக்கும் வேங்கை மரத்தின் கீழ் அமர்ந்தனர். மணப் பேச்சு எழுந்தது. அவளை அவனுக்கு அளிக்க