பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இ. புலவர் கா. கோவிந்தன்

இசைந்தான்் அவள் தந்தை. இதைக் கண்டாள் தோழி. உடனே சென்று அவளுக்கு உரைத்து உள்ளம் மகிழ்ந்தாள். அப்பெண்ணும், அவள் ஆருயிர்த் தோழியும், அன்று ஆடிய ஆட்டத்தையும், அவ்வாட்டத்தின் பயனையும் கூறுகிறது இப்பாட்டு. "பாடுகம்வா வாழி தோழி! வயக்களிற்றுக் கோடு உலக்கையாக, நற்சேம்பின் இலை சுளகா ஆடுகழை நெல்லை அறை உரலுள்பெய்து இருவாம்; பாடுகம்வா வாழிதோழி! நல்தோழி! பாடுற்று, - இடிஉமிழ்பு இரங்கிய இரவுபெயல் நடுநாள் 5 கொடிவிடுபு இருளிய மின்னுச்செய் விளக்கத்துப் பிடியொடு மேயும் செய்புன் யானை, அடிஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன், நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்

கடுவிசைக் கவணையில் கல் கைவிடுதலின் 10 இறுவரை வேங்கையின் ஒள்வி சிதறி ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத் தேன்செய் இறாஅல் துளைபடப் போகி நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக்

குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப் பலவின் பழத்துள் தங்கும் மலைகெழு வெற்பனைப் பாடுகம்வாவாழி தோழி! நல்தோழி! பாடுற்று; இலங்கும் அருவித்தே, இலங்கும் அருவித்தே வானின் இலங்கும் அருவித்தே தான்்.உற்ற சூள்பேணான் பொய்த்தான்் மலை; 20 பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?