பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 63

அஞ்சல் ஒம்பு என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ? குன்றுஅகல் நல்நாடன் வாய்மையில் பொய்தோன்றின், திங்களுள் தீத்தோன்றி யற்று: -

இளமழை ஆடும்; இளமழை ஆடும்; 25 இளமழை வைகலும் ஆடும்; என்முன்கை வளைநெகிழ வாராதோன் குன்று. வாராது அமைவானோ? வாராது அமைவானோ? வாராது அமைகுவான் அல்லன்; மலைநாடன் ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழல்கயத்துள் 30

நீருள் குவளை வெந்தற்று மணிபோலத் தோன்றும்; மணிபோலத் தோன்றும் மண்ணா மணிபோலத் தோன்றும்; என் மேனியைத் துன்னான் துறந்தான்் மலை.

துறக்குவன் அல்லன், துறக்குவன் அல்லன், 35 தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன்; - தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில் சுடருள் இருள் தோன்றியற்று

எனவாங்கு, நன்றாகின்றால் தோழி! நம் வள்ளையுள் 40

ஒன்றிநாம் பாட, மறை நின்றுகேட்டருளி மென்தோள் கிழவனும் வந்தனன், நுந்தையும் மன்றல் வேங்கைக் கீழ்இருந்து மணம் நயந்தனன் நம்மலைகிழ வோற்கே!”

தலைவியும் தோழியும் பாடிய வள்ளைப் பாட்டைத் தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைவு வேண்டிவரத்