பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ந் புலவர் கா. கோவிந்தன்

தந்தை அவ்வரைவிற்கு உடம்பட்டமை தோழி தலைவிக்கு உரைத்தது எனும் துறையமைய வந்துளது இச்செய்யுள்.

உள்ளுறை தினை உண்ணவந்தயானை, தலைவியின் நலம் நுகரவந்த தலைவனாகவும், கவண் எறிந்த கானவன், கடுஞ்சொல் கூறிய தாயாகவும், அக்கல், வேங்கை மலர் முதலாயினவற்றைச் சிதைத்தல், தாய் கூறிய கடுஞ்சொல், ஆயத்தாரை அகற்றித் தோழியைத் துயர் செய்து, தலைவி யின் உள்ளத்தில் கிடந்து வருத்தியதாகவும் கொள்க.

2. சுளகு-முறம், 3. அறை-பாறை, இருவாம்-குற்றுவாம்; 5. இரங்கிய-ஒலிக்கும்;9. பணவை-பரண்: 11. வி-மலர்; 13. தேன்செய் இறாஅல்-தேனடை 18. இலங்கும்-விளங்கத்தோன்றும் : 30. ஈரம்அருள்: கயம்-குளம், 33. மண்ணா-கழுவாத், 34. துன்னான்சேராது; இனையவை - இவை போன்றன; 41. ஒன்றி - கலந்து, 42. கிழவன்-உரிமைஉடையவன்:44. நயந்தனன்- இசைந்தனன்.