பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஆர்வுற்றார் நெஞ்சம்

மலை நாட்டிலே செல்வக் குடியொன்றிலே பிறந்த ஒர் இளைஞன். தன் ஊரை அடுத்துள்ள ஓர் ஊரின் தலைவன் மகளை, அவள் தினைப்புனம் காத்திருக்குங் கால் கண்டு காதல் கொண்டான். அன்றுமுதல், அவளை ஒரு போதும் மறவாது, நாள்தோறும் வந்து மகிழ்ந்து சென்றான். இவ்வாறு சின்னாட்கள் சென்றன. பிறகு, யாது காரணத்தாலோ, அவன் அவண் வந்திலன். "இன்று வந்திலன். நாளை வருவான்!” என எத்தனையோ நாட்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தாள் அப்பெண். அதனால் அவள் துயர் அதிகமாயிற்று. அவள் உள்ளத் துயரை உடல் தளர்ந்து காட்டிற்று. அதனால், அவ்வூரார் அவளைக் குறித்துப் பலவாறு பேசத் தொடங்கினர். அதை அறிந்தாள் அப் பெண்ணின் உயிர்த் தோழி. பழியுரை கேட்கப் பொறாதது அவள் உள்ளம். அதனால், "பிறர் கண்டு பழிக்குமளவு, நின் உள்ளத் துயரைப் புறங்காட்டிக் கொள்வது தகாது. அது நின் பெண்மைக்கே இழுக்காம்!”

குறிஞ்சி-5