பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஒ. புலவர் கா. கோவிந்தன்

எனப் பலப்பல கூறித் தேற்றினாள். அவ்வாறு கூறக் கேட்டும், அப்பெண், துயர் கொள்வதை விட்டாளல்லள்.

தான்் எவ்வளவு கூறியும், அப்பெண் தன் துயர் தோன்றாவாறு மறைத்து வாழக் கருதாமை கண்ட தோழி, அவளைத் தேற்றும் வழி யாது எனச் சிந்திக்கத் தொடங்கி னாள். அவள் சிந்தனையில் ஒரு தெளிவு பிறந்தது. அப் பெண் அவ்விளைஞன்பால் பேரன்பு கொண்டுள்ளாள். மேலும், தன் காதலனுக்குப் புகழ் பெருக வாழ்பவளே வாழ்க்கைத் துணையாவாள், பிறர் அவனைப் பழித்தற்குத் தான்ே காரணமாம் வகையில் நடந்து கொள்வாள் நல்ல பெண்மணியாகாள் என்ற அறிவும் உடையாள். அதனால் அவள் முன்நின்று, நீ இவ்வாறு வருந்தப் பிரிந்து மறந்து வாழும் அவன் மாண்புடையனல்லன், என அவள் பொருட்டு, அவனைப் பழிக்கின், அவன் பிரிந்தமையால் உண்டாய உள்ளத்துயரைப் பிறர் உணருமாறு நான் நடந்து கொண்டமையாலன்றோ, அவர்கள் பழிக்கின்றனர். பிறர் அவனைப் பழிக்க, என் துயர் நிலையன்றோ காரணமா யிற்று. இனி, என் துயரைப் பொறுத்துக் கொள்வேன், பிறர் உணராவாறு காத்துக் கொள்வேன்! என எண்ணி அடங்கு வள். இதுவே அவளை ஆற்றும் வழியாம் என முடிவு செய்தாள்.

உடனே அப்பெண்ணின்பால் சென்று. "தோழி! நின் காதலனுக்குரிய மலைநாட்டில் வாழும் யானை, எதிர்ப் பட்ட எப்பொருளையும் அழித்தொழிக்க ೧೯ುಖ ஆற்றல் வாய்ந்த புலியைக் கொன்றுவிட்டுத் தன் பழம்பெரும் பகையை ஒழித்த அவ்வுள்ள அமைதியோடு, தழை உணவை விரும்பித் தின்று, தெளிந்தோடும் அருவியில் நீர்