பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 67

உண்டு, அவ்வருவிக் கரையில், அவ்வருவி ஒடுங்கால் உண்டாம் ஒலி தாலாட்ட, அச்சமோ, கவலையோ இல்லாமல், அயர்ந்து உறங்கும் என்று கூறுவர். தன் நாட்டு விலங்கினம் பெற்று வாழும் அவ்வமைதி நிறைந்த வாழ்க்கையைக் கண்டு மகிழும் அவன், நாம் அம்மன அமைதி பெற்று வாழத் துணை புரிந்திலன். அவன் நாட்டு யானை, தன் பகையைக் கொன்றுவிட்டு, அமைதியாக உணவுண்டு, அருவி தாலாட்ட அயர்ந்து உறங்குவது போல, நாமும், நம்மைப்பற்றி உரைக்கும் அலர் உரைகளை ஒழித்து விட்டு, அவனை மணந்து, அவன் சுற்றமும், நம் சுற்றமும் இனிது பாராட்ட இல்லறம் நடாத்த, அவன் விரைந்து வந்து வரைந்து கொண்டிலன். இந்நிலையில், நாம் நமக்கு வேண்டியதைப் பெறும் நல்ல வழி யாது என்பதை அறிந்த அறிவுடையேமாயின், அது அவன் செயலைப் பழித்து வள்ளைப் பாட்டுப் பாடுவதேயாம். ஆகவே, தோழி! யானைக் கொம்பால், மூங்கில் நெல்லைக் குற்றி அரிசி ஆக்கும் நாம், அவன் பொருளாக வள்ளைப் பாட்டுப் பாடுவோம் வா" என அழைத்துப் பாடத் தொடங்கினாள்:

"தோழி! பிறர்கண்டு பழிக்கும் செயல்களைச் செய்ய நினைக்கவும் நானும் நல்லுள்ளம் உடையவரே பெரியார் எனப்படுவர். அவ்வாறு பழி கண்டு நானும் பண்புடைப் பெரியோர் வாழும் நாடே பயன்மிக்க நாடாம். எவ்வழி நல்லவர் ஆடவர். அவ்வழி நல்லை வாழிய நிலனே! என்றார் ஒரு பெரியார். ஆனால், நம் அன்பைப் பெற்ற அவ்விளைஞன்பால் அப் பண்பு இல்லை. அவன் ஒரு நாண் அற்றவன். அவன்பால் அன்பு கொண்ட நாம்,