பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஆ. புலவர் கா. கோவிந்தன்

அவன் பிரிவுத் துயரால் பெரிதும் வருந்தவும், நம்மை அறவே மறந்து வாழும் தன் கொடுமைக்கு நாணவில்லை அவன் உள்ளம். அவன் அன்னனாதல் அறிந்தும், அவன் நாட்டு மலையினின்றும் வீழ்ந்தோடும் அருவிகள், வெண் ணுரை சிதற விரைந்து பாய்கின்றன. இயற்கையோடு மாறுபட்ட இந்நிகழ்ச்சிக்குக் காரணம் யாது என்பதை ஆராய்ந்து காண்போம் வா" எனப் பழித்து ஒரு பாட்டுப் பாடினாள். -

அது கேட்ட அப்பெண், தன் தோழியைப் பார்த்து, "தோழி! அவனை நீ நன்கு அறிந்திலை. அதனால், நீ இவ்வாறு பழிக்கின்றனை. பாராட்டும் பண்புகள் பல அவன்பால் உள. ஒன்று கூறுகிறேன் கேள். பொருள்களின் நிறையை நிறுத்துத் தருவதில், துலாக்கோல் என்றும் தவறுவதில்லை. அதைப்போல, என்றும் அறமே விரும்பும் நல்லுள்ளம் உடையார் தம் கடமையில் சிறிதும் தவறார். தம்பால் வந்து முறை வேண்டி நிற்பவருள், தமக்கு வேண்டியவர் உளரேல், அவர் பிழையை மறைத்து, அவர்க்கு ஆக்கம் அளிப்பதோ, வேண்டாதார் உளரேல், அவர் பிழை செய்திலராயினும், அவர்க்கு அழிவு தருவதோ அப் பெரியார்பால் நிகழாது. நம் அன்பனும் என்றும் அறத்தையே விரும்புவான். அறம் அல்லாதன வற்றை அவன் உள்ளம் எண்ணிப் பார்ப்பதும் இல்லை. அதனால், எதையும் நடுநிலைமையில் நின்றே ஆராய்ந்து முடிவு செய்வதும், அதற்கேற்ப நடப்பதும் செய்வன். அத்தகையான் நம்மை வெறுப்பினும், அதனால் நமக்குத் துயர் தருவது செய்யான். அவன்பால் காணலாம் இப் பண்பறியாது, அவனைப் பழிக்கத் தொடங்கினையே,