பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 69

676TGT நின் பேதைமை!” எனக் கூறி அவன் புகழ் பாடினாள்.

மீண்டும் தோழி தொடங்கினாள்: "நங்கை நல்லாய்! நீ கூறுவது போல், நின் காதலன் அறம் விரும்பும் ஆண் மகனாயின், அவன், பழியொடு படராப் பேரின்பம் தருவதாய இல்லற வாழ்க்கையினைப் பெறுதற்காம் வழி வகைகளை, இன்னே, விரைந்து மேற்கொள்ளுதல் வேண்டும். அதை எண்ணாது, நிலையற்றதும், பயனற்றது மாய இக்களவொழுக்க இன்பத்தையே விரும்புகின்றனன். 'பயன் இல்சொல் பாராட்டுவானை மகன் எனல், மக்கட் பதடி எனல் என்பர் பெரியோர். பயனற்ற சொற்களை வழங்குபவனே மகனல்லனாயின், அந்நிலைக்கும் கீழாய்ச் சென்று, பயனில் செயலைச் செய்யும் இவனை என்னென்பது! இவ்வாறு, மக்கட் பண்பற்றவனாதல் அறிந்தும், இவன் மலைநாடு, வளம் பெற்று விளங்குகிறது. கோங்கின் மலரும், மகரந்தமும் உதிர்ந்து படிந்து கிடக்கும் அவன் நாட்டு மலைகளைப் பார். நம் ஊரில் அணிபல அணிந்து பெருமித நடை நடந்து செல்லும் அரச யானை போல் தோன்றும் அதன் அழகைப் பார்! இயற்கைக்கே மாறுபாடான இதனை என்னென்பது!’ எனக் கூறிப் பழித்தாள். -

உடனே அப்பெண், அவன்பால் காணலாம் மற்றொரு பண்பை எடுத்துக்காட்டிப் பாராட்டத் தொடங்கினாள். "தோழி! அவன் மலை, சுனை பல கொண்டது. அச்சுனைகள் இனிய, குளிர்ந்த நீரால் நிறைந்துள்ளன என்பதை நீ அறிவாய். அச்சுனை நீரைக் காட்டிலும் இனிமையும். அருளும் உடையவன் அவன்.