பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஆ புலவர் கா. கோவிந்தன்

அத்தகைய பேரன்புடைய அவன், இல்லை எனக் கூறித் தன்பால் வந்து பொருள் வேண்டி இரப்பார்க்குத் தேரும் திரண்ட பொருளும் கொடுக்கும் பெருங் கொடையாளனு மாவான். இவ்வாறு, பேரருள் உள்ளமும், பெருங் கொடைக் குணமும் குன்றாது வாய்க்கப் பெற்ற அவன், தன் பிரிவாலாய பெருந்துயர், நம்மை வருத்தக் கண்டும் வாளா இருப்பானோ? இரான். வந்து நம் துயர் தீர்ப்பான். ஆனால், அவன் வந்திலன். அவன் வாராமைக்கு, வரைவுப் பொருள் தேடும் முயற்சி காரணமாதலும் கூடும். இதை அறிந்து கொள்ள மாட்டாது அவனைப் பழிக்காதே!” எனக் கூறி அவனைப் பாராட்டினாள்.

அவள் அவ்வாறு புகழக் கேட்டுத் தோழி அடங்கினா ளல்லள். தன் அகத்துயர் பிறர்க்குப் புலனாகாவாறு, அவள் அதை அடக்கிக் கொள்ளுதல் வேண்டும். அந்த அளவு, அவள் உள்ளத்தில் உறுதி பிறத்தல் வேண்டும். அது, அவள் முன் அவனைப் பலகால் பழிப்பதினாலேயே உண்டாம் என உணர்ந்து, அவனை மேலும் பழிக்கத் தொடங்கினாள். "தோழி! அவன் வருத்தம் தாரான் என்றும், அவன் வாராமை கண்டு வருந்துகிறேன் என்றும் கூறுகின்றனை. ஆனால் உன் நிலைமை யாது? நின் உடலின் உறுப்பளவு அறிந்து, நம் தந்தை ஆக்கி அணிவித்த அணிகளெல்லாம், இன்று தாமே கழன்று விழுகின்றனவே. காரணம் என்ன? அந்த அளவு நின் உடல் தளர்ந்து விட்டது. அத் தளர்ச்சிக்குக் காரணம் யாது? அவன் உன்னைப் பிரிந்து மறந்து வாழ்வதால் வந்த விளைவன்றோ அது? இவ்வாறு, உடல் தளர்ந்து வாடுமாறு வருந்தப் பெருந்துயர் அளித்துப் போன