பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 71

அத்துணைக் கொடியவன் அவன். அத்தகையான் மலை யாய் இருந்தும், அது தன் வளத்தில் குறைவுற்றிலது. அவன் மலை உச்சியில் கட்டப் பெற்றுத் தேன் நிறைந்து கிடக்கும் தேனடைகளைப் பார். மேகத்திடையே நுழைந்து, ஒளி மங்கித் தோன்றும் திங்கள் போல் காட்சியளிக்கும் அவற்றின் அழகைக் காண். இது என்னே உலகியல்!” என்று கூறிப் பழித்தாள்.

தோழி அவ்வாறு தொடர்ந்து பழிக்கவே, அப்பெண் னிற்கு, அவள் மீது கடுஞ்சினம் பிறந்தது. அதனால், "தோழி! நின் நாவை அடக்கிப் பேசு. அவன் என் உள்ளம் கவர்ந்த கள்வன். அதை அறிந்தும் அவனை என் முன்னரே பழிக்கின்றனையே. என்ன துணிவு உனக்கு. மேலும், பழி கண்டஞ்சாப் பண்பற்றவன் அல்லன் அவன். என்னை மணந்து, மனையறம் மேற்கொள்ளும் தன் கடமையைக் களவொழுக்க இன்பத்தால் கருத்திழந்து, மறந்து பிறர் பழிக்க நடந்து கொள்ளான். அவன் கடமை அறிந்தவன். அதைப் பிறர் சுட்டிக்காட்டா முன்பே, விரைந்து வந்து வரைந்து கொள்வன். அதை நான் அறிவேன். இதையெல்லாம் அறிந்து கொள்ளாது, அவனைப் பழி தூற்றல் அடாது!" எனக் கூறி அவளைப் பழித்து, அவனைப் பாராட்டினாள்.

எப்போதும் அவன் நினைவாகவிருந்து வருந்தி வாடும் அவளை ஆற்றுதல் வேண்டும், அதற்கு அவனை அவள் முன் பொய்யாகப் பழிப்பதே வழியாம் எனக் கண்டு, அவ்வாறு அவனைக் குற்றம் சாட்டிப் பேசிய தோழி, தன் கடமையினைச் செவ்வனே செய்து