பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஆ புலவர் கா. கோவிந்தன்

விட்டோம் என்ற அமைதியால், அம்மட்டோடு நிறுத்திக்

கொண்டாள். -

அவள் அம்மட்டோடு அடங்கி விட்டமைக்கு, அவ்வுள்ள அமைதி மட்டும் காரணமாகாது. அவர்கள் பாடத் தொடங்கியதும் ஆங்கு வந்தான்் அவ்விளைஞன். வந்தவன், ஒருபால் ஒதுக்கிடமாக இருந்து, அவர் பாடியன எல்லாம் கேட்டான். அப் பாட்டின் மூலம் வெளிப்பட்ட தன் காதலியின் பெருமை கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டான். பாட்டு முடிவுற்றதும், தன் காதலி அறியாவாறு அவள் பின்புறம் சென்றான். அவள் முன்னே இருந்து தன் வருகையைக் கண்டு கொண்ட தோழியை, அதை அவளுக்கு உணர்த்தாவாறு, கையை ஆட்டிச் சைகை செய்தான்். மெள்ளச் சென்று திடுமெனத் தன் காதலியின் கழுத்தைப் பற்றித் தன் மார்பின் மீது சாய்த்துக் கொண்டான். அவ்வின்பத்தால், அவளை அதுகாறும் பற்றித் துயர் செய்த பசலையும், ஞாயிறு தோன்ற, அதன்முன் நிற்க மாட்டாது ஓடி மறையும் இருளே போல், மறைந்து விட்டது. அவள் உள்ளம் இன்பத்தால் நிறைந்தது.

மறுநாள், தனியிடத்தே இருந்து, அவ்வின்ப நிலை யினை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். அம் மகிழ்ச்சியில் அவளை அறியாமலே அவள் வாய் இப்பாட்டை மெல்ல இசைத்தது.

“மறங்கொள் இரும்புலித் தொன்முரண் தொலைத்த முறஞ்செவி வாரணம் முன் குளகு அருந்திக் கறங்கு வெள்அருவி ஒலியின் துஞ்சும் பிறங்கு இரும்சோலை நன்மலை நாடன்,