பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ல் புலவர் கா. கோவிந்தன்

சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர - 30 ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது, என் ஆயிழை மேனிப் பசப்பு."

தோழியும் தான்ும் பாடிய வள்ளைப் பாட்டைத் தலைவன்; சிறைப்புறமாக இருந்து கேட்டு வந்து தலையளி செய்தான்ாக, மகிழ்ந்த தலைவி, பின்னொருகால், அம்மகிழ்ச்சியைத் தன்னுள்ளே எண்ணி மகிழ்ந்தது எனும் துறையமைய வந்துளது இச்செய்யுள். -

உள்ளுறை புலியாய பழம் பகையைக் கொன்று, கவலையற்று உணவு உண்டு, அருவி ஒலியில் யானை துஞ்சல், தன்னைக் குறித்து ஊரார் கூறும் அலரைக் கெடுத்து, அவனை மணந்து, இல்லறம் மேற்கொண்டு, இருவர் சுற்றமும் பாராட்டத் தலைவி இன்பம் நுகர்தலாம்.

1. மறம். வீரம் இரும் பெரிய தொன்முரண்: பழம் பகை: 2. குளகு தழை உணவு: 3. கறங்கு ஒலிக்கின்ற; ஒலி. தாலாட்டுதல் போன்ற அருவி ஒலி, 4. பிறங்கு வளம் பெருகும்; இரும் கரிய, 5. மறக்கு மறப்பானாக, 6. நற்கு - நன்கு; 7. வெதிர் - மூங்கில்;12. நாண் இலி: நாண் அற்றவன் 14. ஓர்வுஉற்று, ஆராய்தலை/ மேற்கொண்டு; ஒல்காத சாயாத,18. கொன்;பயன் இன்மை, ஆளன்; செய்பவன்; அதாவது பயனில் செயல் புரிவான்; 19. கூரும் நோய், மிக்க நோய், ஏய்ப்ப அடைய:22. நெய்க்கண் இறால், தேன் நிறைந்த தேனடை:24, எவ்வம்; துன்பம்; உlஇயினான்; தந்தவன். 25. எல்லா: தோழி.