பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

வீங்கின தோள்கள்!

கண்டார் மனதை மருட்டும் பேரழகு வாய்ந்த மலை நாட்டுப் பெண் ஒருத்தியும், அவளைப் போன்றே, அம்மலை நாட்டில் பிறந்த, ஆண்மையும், அழகும், அறவுணர்வும், அருள் உள்ளமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஓர் ஆடவனும் காதல் கொண்டு, அதை அப் பெண்ணின் தோழி ஒருத்தியின் துணை கொண்டு, பெற்றோர் அறியாவாறு வளர்த்து வந்தனர். அக்காதல் வாழ்வைப் பெற்றோர்க்கு நீண்டநாள் மறைத்து வைத்தல், அவர்க்கு அரிதாயிற்று. அதனால், எண்ணற்ற இடையூறு உற்றனர் இருவரும்; அதனால், அவளை விரைவில் வரைந்து கொள்ளுமாறு, அவ்வாடவனை அவள் தோழி வேண்டிக் கொண்டாள். அவனும் அதற்கு இசைந்து, அத் திருமணத்திற்குத் தேவையாம் பொருள் தேடும் பணி யினை மேற்கொண்டான். அதனால் அவன் அவள்பால் வருவது தடையுற்றது. வரைவும் விரைவில் முடிந்திலது. அவன், அது காரணமாகப் பிரிந்திருந்ததால், அவனைக்