பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ல் புலவர் கா. கோவிந்தன்

காண்பதும் இயலாது போயிற்று, அதனால், அப்பெண் மிகவும் வருந்தினாள். அவள் வருத்தம் காணத் தோழிக்கும் வருத்தம் மிக்கது. ஆனால், வருந்தும் அவளைத் தேற்றக் கடமை பூண்டதாலே வருந்தின், அவள் துயர் மேலும் அதிகமாம் என எண்ணித், தன் வருத்தத்தை வெளிக் காட்டிக் கொள்ளாது மறைத்து, அவளைத் தேற்ற முயன்றாள்.

அவ்வாறு தேற்றத் துணிந்த தோழி, அவளை எவ்வாறு தேற்றுவது, யாது கூறித் தேற்றுவது என நெடிது சிந்தித்தாள். தம் அன்பைப் பெற்ற ஒருவர், தம்மைவிட்டுப் பிரிந்து, வேற்றுார் சென்று, விரைவில் வாராராக, அவரைக் காணாது வருந்துங்கால், அவரோடு தொடர்புடையன வற்றைக் காண்பதாலும், அவரைப் பாராட்டிப் பிறர் கூறுவனவற்றைக் கேட்பதாலும், ஒரளவு உள்ளம் அமைதி அடையும். அதனால், தம் துயரை மறந்து, அவரை நேரே கண்டாற்போல் மகிழ்வதும் செய்வர். மனத்தின் இவ்வியல் புணர்ந்தவள் தோழி. அதனால், அப்பெண்ணின் முன், அவன் புகழ் பாட எண்ணினாள். ஆனால் ஆங்கு, அவ் விருவர் மட்டும் தனித்திருக்கவில்லை. அவரோடு, அவர் விளையாட்டுத் தோழியரும் உள்ளனர். அதனால் அவனை அவர் அறியும் வண்ணம் வெளிப்படப் புகழ்தல் தகாது என உணர்ந்தாள். அதனால், அவள் அப் பெண்ணைத் தன் அருகழைத்துத், "தையால்! தம் குலக் கடவுளாம் குன்றுறை குமரவேளிற்கும், நம் அன்பனுக்கும் சில பல குணங்களில் ஒற்றுமை உளது. அதனால், அம் முருகனைப் பாராட்டிப் பாடுவது போல் நம் அன்பன் புகழைப் பாராட்டிப் பாடுவோம், வருக! அது, நின்மனத்