பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 77

துயரை ஓரளவு மாற்றவும் கூடும்!” எனக் கூறினாள். அவளும் அதற்கு இசைந்தாள்.

உடனே, புலியைக் கொன்று வென்ற யானையைக் கானவர் தாம் கொன்று கொண்டு வந்து, தந்த தந்தத்தால் செய்யப் பெற்ற ஓர் உலக்கையையும், வண்டுகள் தேன் தேடி வருமாறு மலர்கள் மலருமளவு முற்றிய சந்தன மரத்தால் செய்யப் பெற்ற ஓர் உலக்கையையும் கொண்டு வந்தனர். மலை நாட்டில் விளையும் நெல்லினமாய ஐவனத்தைப் பாறையில் குடைந்து செய்த உரலில் இட்டு, அதை இடித்துக் கொண்டே, முருகனைப் பாடுவோர் போல், அவன் புகழ் பாடத் தொடங்கினர்.

முதலில் பாடத் தொடங்கிய தோழி, "தன் மீது பகை கொண்டு, கருதிய உயிரைத் தவறாது கைப்பற்ற வல்ல கூற்றுவனே வரினும், அவனால் தான்் அழிந்து போகாது, மாறாக, அவனைத் தான்் அழிக்கவல்ல பேராற்றலும், தன்பால் அன்பு கொண்டு வந்தார். தன்னினும் தாழ்ந் தோரேயாயினும், அன்புடைமையால், அவரைப் பணிந்து, பணிபுரிந்து நிற்றலை நாணாப் பேரருளும் ஒருங்கே உடையவன் நம் அன்பன். நம் சுற்றத்தார், தாமே மனம் விரும்பி, உன்னைத் தனக்கு மணம் செய்து தர உடம்படும் காலத்தை எதிர்நோக்கி நிற்கும் அவன் உள்ளத்தை உணர வைக்கும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டது அவன் மலை. மலையுறையும் முருகனை வணங்கக் கூப்பிய மகளிர் கைவிரலில், நீலக்கல் இழைத்துச் செய்த விரலணி கிடந்து அழகு செய்தல் போல், மலரும் பருவம் பெற்ற காந்தளின் பேரரும்பு மீது, அதன் உள்ளே உள்ள தேனை உண்ண விரும்பிய வண்டு, அது மலரும் காலத்தை எதிர்