பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஆ புலவர் கா. கோவிந்தன்

நோக்கியிருக்கும் அம் மலைக் காட்சி அவன் உள்ளக் கருத்தினை உணர்த்துவதாமன்றோ! இவ்வாறு சிறந்த இயல்புடைய அவனையும், எழில்மிக்க இயற்கைக் காட்சி களைக் கொண்ட அவன் மலையையும் பாடிப் பாராட்டு வோமாக!” எனப் பாடினாள்.

அவ்வாறு பாடிய தோழி, அப்பெண், அம்மலையில் ஏறியும் இறங்கியும் ஒடி ஆடும் வருடை மான் கன்று, எதற்கும் எவ்வித இடையூறு செய்யாது, பாறையின் ஒருபால் உட்கார்ந்திருக்கும் கருங்குரங்கைத் தன் இளமை யால் மருண்டு நோக்குவதுபோல், சுற்றத்தார் என்னை என் அன்பனுக்கு மணம் செய்து தர மறுத்து விடுவரோ! என அஞ்சித் தம் சுற்றத்தாரைக் கண்டு மருண்ட மனத்தினளாய் நிற்பதைக் கண்டு, "தோழி! நம் சுற்றத்தார் நின்னை நம் அன்பனுக்கே மணம் செய்து தருவர். இது உறுதி அவரைக் கண்டு மருள்வது அறிவுடைமையன்று. ஆகவே அதை விடுத்து, அவனையும், அவன் மலையையும் பாராட்டி, ஒரு பாட்டுப் பாடுவாயாக!” என வேண்டிக் கொண்டாள்.

தோழியின் வேண்டுகோளை ஏற்றுப் பாடத் தொடங்கிய அப்பெண், ஆற்றல், அரும்பொருள் ஆகிய இவற்றைத் தான்் பெற்றிருக்குமளவு பெறமாட்டாமையால் தன்னினும் குறைபாடுற்று, அதனால் தன்னோடு மாறு பட்டு மனம் பொறாது பழி கூறுவார் உளரேனும், அவரை, அவர்பால் காணலாம் அக் குற்றத்தைப் பல்லோர் அறியக்கூறிப் பழித்தல் அறியாப் பெருமையுடையவன் நம் அன்பன். மான் காது போலும் வடிவுடையனவாய், மூங்கிற் கணுக்களில் தோன்றி, அம்மூங்கிலை மூடிக்