பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 79

கிடக்கும் பாளைகள், கழன்று உதிர்ந்து, அம்மூங்கிலின் அகஅழகைப் புறந்தோன்றக் காட்டி, அன்ப! நீ விரைந்து சென்று வரைந்து கொள்ளாமையால், நின் காதலியின் உடலில் பரந்து, பெருந்துயர் செய்யும் பசலை நோய், நீ வரைந்து கொள்ளின், அவள் உடலை விட்டு அகலவே, பண்டு, அவள் மேனி பெற்றிருந்த பேரழகு விளங்கித் தோன்றும்! என அவனுக்கு அறிவூட்டும் மாண்புடையது அவன் மலை!” என அவனையும், அவன் மலையையும் பாடிப் பாராட்டி, அவன் கடமையையும், தன் துயர்க் கொடுமையையும் எடுத்துக் காட்டி நினைப்பூட்டினாள்.

அப்பெண் பாடிய அப்பாட்டின் பொருள் அறிந்த தோழி, அவள் அவன்பால் சிறிது சினமும் கொண்டுள் ளாள், அச்சினம் மாற வேண்டின், அவள் கேட்க, அவனை யான் பழித்தல் வேண்டும். அதுகேட்டுத் தன் காதலனைப் பிறர், தன்முன் பழித்தல் கண்டு, அவனை அவர் அறியப் பாராட்டித் தன் துயரை, அவர் அறியாவாறு, அடக்கிக் கொள்வள் என உணர்ந்தாள். உடனே, "தோழி! அவன் நாட்டு யானை, தன் பிடியோடும் கூடிச் சென்று, வளகு என்னும் தழையினை விரும்பி உண்டு, வளர்ந்த நீண்ட தன் இரு தந்தங்களும் தனக்குப் பேரழகு செய்ய, மலை நடந்து செல்வது போல் பெருமித நடை போட்டு நடந்து செல்லும் சிறப்புடையது. அவன் நாடு. தன் நாட்டு விலங்குகள், இவ்வாறு. மகிழ்ந்து வாழக் கண்டும், உன்னை மணந்து, மனம் விரும்பும் வாழ்க்கை மேற்கொண்டு, புகழ் பெருக வாழ வேண்டும் என விரும்பாத அவனைப் பாராட்டிப் பாடுவதை விடுத்துப் பழித்து ஒரு பாட்டுப் பாடுவாயாக!” எனக் கூறினாள்.