பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஒ புலவர் கா. கோவிந்தன்

இவ்வாறு, தோழி கூறக் கேட்ட அப்பெண், "என் துயரையும், அதை அறியா அவன் கொடுமையையும் கூறி யதைக் கொண்டு, அவன் மீது நான் சினங்கொண்டிருப்ப தாக எண்ணி விட்டாள் இத் தோழி. என்னே இவள் அறியாமை! அவன் தவறுடையானும் அல்லன். அவன் தவறு கண்டு சினங் கொள்ளுபவளும் அல்லள் நான் என்பதை அவளுக்கு உணர்த்துதல் வேண்டும்; எனக் கருதினாள். அதனால், அவளை நோக்கித், "தோழி! ஈதல், இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்ற உண்மையை உணர்ந்தவன் நம் அன்பன். அதனால், வறுமையால் வாடித் தன்பால் வந்து, தம் வறுமை நிலையினை உரைத்து வருந்துவார்க்கு, அவர் வறுமை போக வாரி வழங்கும் வளமும், வற்றாத உள்ளமும் கொண்டுள்ளான். அவ்வாறு வந்து இரப்பார்க்கு வழங்கலாகா வறுமையுற்று விடின், அந்நிலையில், அதைப் பொருள் கொடுத்துப் போக்க மாட்டாது, அவர் வருத்த நிலை கண்டு வாளா வருந்தி வாழ்வதினும், இறந்து, இறவாப் பெருநிலை பெற எண்ணும் சிறப்புயர்ந்த உள்ளமும் உடையவன் அவன். அத்தகையான் இப்போதே வந்து வரைந்து கொள்ளாமை யால் கொடியவன் போல் தோன்றிடினும் உண்மையில் கொடியவனல்லன், விரைவில் வந்து வரைந்து கொண்டு பேரின்பம் தருவன். இதை அறியாது, அவனைப் பழிதூற்றும் நின் செயல், முற்றாத காய்களைக் கொண்ட வாழைக்குலையின் ஒரு சீப்பு, மடங்கிய விரல்களைக் கொண்ட புலியின் அடிபோலத் தோன்றுவதால், அக் காய்கள் முற்றிய பின்னர் பேரின்பம் தரும் பழங்களாய்